search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையநல்லூரில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக சீரமைக்கப்பட்ட பாலம்
    X

    புதுப்பிக்கப்பட்ட பாலத்தை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை திறந்து வைத்த காட்சி.

    கடையநல்லூரில் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக சீரமைக்கப்பட்ட பாலம்

    • கடையநல்லூர் நகராட்சி 15 மற்றும் 16-வது வார்டுக்குட்பட்ட சிந்தாமதார் பள்ளிவாசல் தெருவில் ஒரு பாலம் குறுகிய நிலையில் இருந்தது.
    • அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் நகராட்சி 15 மற்றும் 16-வது வார்டுக்குட்பட்ட சிந்தாமதார் பள்ளிவாசல் தெருவில் ஒரு பாலம் குறுகிய நிலையில் இருந்தது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்பட்டது.

    இதனையடுத்து அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாலம் சீரமைக்கப்பட்டது.

    பாலத்தை தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் செல்லத்துரை பொது மக்களின் பயன் பாட்டிற்கு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். ஆணையாளர் ரவிச்சந்திரன், பொறியாளர் லதா, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், கவுன்சிலர் பாத்திமா பீவி முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் முருகன், முகையதீன் கனி, திவான்மைதீன், மாலதி, தனலட்சுமி, அக்பர்அலி, தி.மு.க. மாநில பேச்சாளர் இஸ்மாயில், வார்டு செயலாளர்கள் பெருமாள்துரை, சுகுமார், ராமையா, வேலாயுதம், முருகையா, செய்யது மசூது, மாவட்ட பிரதிநிதி தம்புராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மூவன்னா மசூது, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மணிகண்டன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் அலி, ஹரிதாஸ், நல்லையா, தினேஷ், காளி, சண்முகவேல், காங்கிரஸ் வினோத், குருநாதன், முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×