என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடையம் அருகே புத்தாண்டு கபடி போட்டி
    X

    கபடி போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்த காட்சி.


    கடையம் அருகே புத்தாண்டு கபடி போட்டி

    • பால்வண்ணநாதபுரம் சகாரா பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கபடி போட்டி நடைபெற்றது.
    • கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் போட்டியினை தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் சகாரா பக்தர்கள் குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் விழாக்களை கொண்டாடும் வகையில் கபடி போட்டி நடைபெற்றது. போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் பல்வேறு பகுதியினை சேர்ந்த கபடி அணியினர் பங்கேற்றனர்.

    போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு கோப்பைகள் மற்றும் பரிசுகள் வழங்கப்படுகின்றன. விழாவில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன், மற்றும் தொழிலதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.

    Next Story
    ×