search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி நகராட்சியில்  சிதம்பரேஸ்வரர் கோவில் தெருவில்  ரூ.10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்
    X

    புதிய அங்கன்வாடி கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    தென்காசி நகராட்சியில் சிதம்பரேஸ்வரர் கோவில் தெருவில் ரூ.10 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்

    • தென்காசி மாவட்டத்தில் 1301 அங்கன்வாடி மையங்களில்58,406 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.
    • குழந்தைகளுக்கு தினமும் 6 வகையான கலவை சாதத்துடன், 3 தினங்கள் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.

    தென்காசி:

    தென்காசி நகராட்சிக்குட்பட்ட சிதம்ப ரேஸ்வரர் கோவில் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதம மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் 2022-23 திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தினை மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் 1301 அங்கன்வாடி மையங் களில்58,406 குழந்தைகள் பயின்று பயன் பெற்று வருகின்றனர்.

    தென்காசி வட்டாரத்தில் 125 மையங்களில் நகராட்சிக்குட்பட்ட புது மனை 5-ம் தெருவில் குழந்தைகள் மையம் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    இதன்மூலம் இம்மையத்தில் 20 குழந்தைகள் பயன்பெறு கிறார்கள். மேலும், இம்மையத்தில் பயிலும் 3 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தினமும் 6 வகையான கலவை சாதத்துடன், 3 தினங்கள் முட்டை யும், தமிழ்நாடு அரசின் மேம்படுத் தப்பட்ட சத்து மாவுக்களும் வழங்கப்பட்டு வருகிறது.

    குழந்தைகளின் உடல், மனம், மொழி, அறிவு மற்றும் சமூக பழக்கவழக்கங்களை தூண்டும் செயல்பாடு களுடன் கூடிய முன்பருவ ஆரம்பக்கல்வி வழங்கப்பட்டு வருகிறது.

    எனவே பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற அங்கன்வாடி மையங்களில் தங்களது குழந்தைகளை சேர்த்து சமூகத்தில் நல்ல சிந்தனை மற்றும் செயல்பாடுகள் கொண்ட குழந்தைகளாக வாழ்வில் பயன்பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையர் பாரிஜான், பொறியாளர் கண்ணன், இளநிலைப்பொறியாளர் முகைதீன் அபுபக்கர், நகர்மன்ற உறுப்பினர்கள் சுனிதா, மஞ்சுளா, நாகூர்மீரான், சங்கர சுப்பிர மணியன், பொன்னம்மாள், லெட்சுமணப்பெருமாள், சுப்பிரமணியன், அபுபக்கர், ரபிக் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×