search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நேருஜி கலையரங்கம்-தெற்கு புறவழிச்சாலை இணைப்பை உடனடியாக தொடங்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு
    X

    மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்த காட்சி.

    நேருஜி கலையரங்கம்-தெற்கு புறவழிச்சாலை இணைப்பை உடனடியாக தொடங்க வேண்டும்-மேயரிடம் பொதுமக்கள் மனு

    • நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.
    • சித்த மருத்துவ கல்லூரி அருகே உள்ள நேருஜி கலையரங்கத்தில் எதிர்புறத்தில் இருந்து வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சி கூட்ட அரங்கில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜு ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றனர்.

    பாளை பகுதியை சேர்ந்த மக்கள் திரண்டு வந்து அளித்த மனுவில், சித்த மருத்துவ கல்லூரி அருகே உள்ள நேருஜி கலையரங்கத்தில் எதிர்புறத்தில் இருந்து வண்ணார்பேட்டை தெற்கு பைபாஸ் சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணி திட்டமிடப்பட்டது.

    இந்த பணிக்காக சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே நாங்கள் எங்களது நிலத்தை வழங்கி விட்டோம். ஆனால் இதுவரை அந்த சாலை பணி நடக்கவில்லை. எனவே அந்த சாலையை விரைந்து அமைத்து மாநகரப் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    தச்சநல்லூர் 13 வது வார்டுக்கு உட்பட்ட பொதுமக்கள் அளித்த மனுவில், எங்கள் பகுதியில் தகனமேடை மிகவும் சேதம் அடைந்து காணப்படுகிறது. இதனால் நாங்கள் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள எரிவாயு தகனமேடைக்கு இறுதிச்சடங்கிற்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே எங்கள் பகுதியில் உள்ள தகன மேடையை விரைந்து சீரமைத்து தர வேண்டும் என்று கூறி இருந்தனர்.

    Next Story
    ×