என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
வெண்ணந்தூர் அருகேஇளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை
- வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட உடுப்பத்தான்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 30) பெயிண்டர். இவரது மனைவி நிவேதா (23).
- விஜயனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா, வெண்ணந்தூர் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட உடுப்பத்தான்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 30) பெயிண்டர். இவரது மனைவி நிவேதா (23).
இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், கோகுல் (4) என்ற மகன் உள்ளான்.
விஜயனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. விஜயன் வெளியே சென்று விட்டார். வீட்டில் தனியாக இருந்த நிவேதா சேலையால் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது பற்றி தகவல் அறிந்து வந்த வெண்ணந்தூர் போலீசார், நிவேதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமணம் ஆகி 5 வருடங்களே ஆவதால், நிவேதா இறப்பு குறித்து நாமக்கல் உதவி கலெக்டர் பிரபாகரன் விசாரணை நடத்தி வருகிறார்.