என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊத்தங்கரை பாலமுருகன் கோவிலை படத்தில் காணலாம்.
ஊத்தங்கரை அருகே துர்கை அம்மன் சிலையை திருடிய கொள்ளையர்கள்
- உண்டியலை உடைக்க முடியாததால் ஆத்திரத்தில் சிலையை எடுத்து சென்றனர்.
- இன்றுகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் எல்.ஐ.சி. அலுவலகம் அருகே பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்குள் நேற்றிரவு உண்டியலை உடைப்பதற்கு மர்ம நபர்கள் புகுந்து முயற்சி செய்துள்ளனர்.
சுவற்றுடன் ஓட்டி இருப்பதால் உண்டியலை உடைக்க முடியவில்லை. இதனால் அருகில் இருந்த துர்கை அம்மன் சிலையை உடைத்து எடுத்து சென்றனர். இன்றுகாலை கோவிலுக்கு சென்ற பக்தர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊத்தங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பாலமுருகன் கோவிலில் துர்கை அம்மன் சிலையை உடைத்து எடுத்து சென்றுள்ளனர். பணம் கிடைக்காத காரணத்தால் சுமார் 4-க்கும் மேற்பட்ட சிலைகளை சேதப்படுத்தியும் சென்றது தெரியவந்துள்ளது.
ஊத்தங்கரை பகுதியில் கோவிலில் உண்டியலை உடைப்பது வழக்கமாக இருந்த நிலையில் தற்போது உண்டியல் உடைக்க முடியாத காரணத்தினால் சிலையை திருடிச் சென்றது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






