என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊத்தங்கரை அருகே  காற்றில் பறந்த அங்கன்வாடி மேற்கூரை   -குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு
    X

    ஊத்தங்கரை அருகே உள்ள புதூர் புங்கனை பகுதியில் அங்கன்வாடி மைய மேற்கூரை காற்றில் பறந்து திறந்து உள்ள நிலையில் உள்ளதை காணலாம்.

    ஊத்தங்கரை அருகே காற்றில் பறந்த அங்கன்வாடி மேற்கூரை -குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர்கள் மறுப்பு

    • காற்றில் பறந்து சென்ற மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும்.
    • மழை நீர் படுவதால் சுவற்றில் மின்சாரம் தாக்கும் நிலையும் உள்ளது.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதூர் புங்கனை கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம் சுமார் 25 குழந்தைகளுடன் நடத்தப்பட்டு வருகிறது.

    இங்கு காற்றில் பறந்து சென்ற மேற்கூரையை சீரமைத்து தர வேண்டும் எனக் கூறி ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும், ஊராட்சி மன்ற தலைவர்களுக்கும் மனு அளித்தும் இதுவரை சீரமைத்து தரப்படவில்லை.

    பச்சிளம் குழந்தைகள் கொளுத்தும் வெயிலிலும், மழையிலும், மேற்கூரை இல்லாத அங்கன்வாடி மையத்தில் சுவற்றின் ஓரம் அஞ்சி நடுங்கி படிக்கும் அவலம் ஏற்படுள்ளதாக கூறப்பட்டுகிறது.மழைக்காலங்களில் மின் மீட்டர் பொருத்தியுள்ள பகுதியில் மழை நீர் படுவதால் சுவற்றில் மின்சாரம் தாக்கும் நிலையும் உள்ளது.

    மேலும் குழந்தைகளுக்கு சமைக்கக்கூடிய அரிசி பருப்பு, உப்பு போன்றவைகளும் மழையால் நனைந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல் மழைநீர் தேங்கி இருப்பதால் தரையில் அமர்ந்து படிக்க முடியாத நிலையும் உள்ளது.

    இதனால் அங்கன்வாடி மையத்தை உடனடியாக சீரமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இது தொடர்பாக ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலரை தொடர்பு கொண்டபோது உடனடியாக குழந்தைகளை மாற்று கட்டிடத்திற்கு மாற்றுவதாகவும், விரைவில் புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.

    Next Story
    ×