என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொப்பூர் கணவாய் அருகே   கார் மீது லாரி மோதி விபத்து   -4 பேர் படுகாயம்
    X

    விபத்தில் சிக்கிய காரின் முன்பகுதி நொறுங்கி கிடப்பதையும், பொக்லின் எந்திரம் மூலம் அந்த காரை அப்புறப்படுத்தியதையும் படத்தில் காணலாம். 

    தொப்பூர் கணவாய் அருகே கார் மீது லாரி மோதி விபத்து -4 பேர் படுகாயம்

    • முன்னாள் சென்ற கார் மீது லாரி மோதி கவிழ்ந்தது.
    • ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தருமபுரி,

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த ஒண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (வயது 58). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (62) என்பவரும் மகாராஷ்டிராவில் இருந்து ஈரோட்டிற்கு கோழி தீவனம் ஏற்றுக் கொண்டு வந்து கொண்டிருந்தனர்.

    நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலை தொப்பூர் கணவாய் ஆஞ்சநேயர் கோயில் அருகே லாரி சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற கார் மீது லாரி மோதி கவிழ்ந்தது.

    இதில் காரில் சென்ற கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரம் பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (62),அவரது மனைவி கலா (56) மற்றும் லாரியில் வந்த ஓட்டுநர்கள் உள்ளிட்ட 4 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் இரண்டு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்படைந்தது. பின்னர் போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்.

    Next Story
    ×