search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொப்பூர் அருகே  ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க  கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
    X

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

    தொப்பூர் அருகே ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

    • விவசாய பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லவும் சிரம படுகின்றனர்.
    • மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகப்படியான மழைநீர் செல்வதால் ஓடை வழியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்திற்கு உட்பட்டது கம்மம்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சியில் கம்மம்பட்டி காட்டுவளவு விநாயகபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமம் தருமபுரி-கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இருப்ப வர்கள் தொப்பையாறு ஆற்றை கடந்து தான் தருமபுரி-சேலம் மாவட்டத்திற்கு விவசாய பொருள்களை விற்பனைக்கு எடுத்துச் செல்லவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் செல்லவும் சிரம படுகின்றனர்.

    மழைக்காலங்களில் இந்த ஆற்றில் அதிகப்படியான மழைநீர் செல்வதால் ஓடை வழியாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    கடந்த காலங்களில் இப்பகுதி பொதுமக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் அப்பகுதி பொதுமக்களே ஒன்றிணைந்து தொப்பையாற்றின் ஆற்றின் குறுக்கே சிறிய பாலம் மற்றும் மண் சாலை அமைத்துக் கொண்டு பயன்படுத்தி வந்தனர்.

    தற்பொழுது தொப்பூர் சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சுற்றியுள்ள கால்வாய்கள் மற்றும் ஆற்றில் அதிகப்படியான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    அதனால் தொப்பை யாற்றில் இருந்து மேட்டூருக்கு செல்லும் பொடாரியம்மன் ஆற்றில் அதிகமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பொதுமக்கள் அமைத்து கொண்ட மண் சாலை உடைந்து மழை நீர் வெளியேறுகிறது.

    இதனால் பொதுமக்கள் ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து தர வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    Next Story
    ×