என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பொம்மிடி அருகே  ஆபத்தான நெடுஞ்சாலை வளைவில் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும்   -வாகன ஓட்டிகள் கோரிக்கை
    X

    பொம்மிடி அருகே உள்ள ஆபத்தான நெடுஞ்சாலை வளைவு.

    பொம்மிடி அருகே ஆபத்தான நெடுஞ்சாலை வளைவில் பாதுகாப்பு சுவர் அமைக்க வேண்டும் -வாகன ஓட்டிகள் கோரிக்கை

    • பாலத்தின் அருகில் மிகவும் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது.
    • தடுப்பு சுவர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே ஓமலூர் செல்லும் சாலையில் வேப்பாடியாறு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தின் அருகில் சேலம் மாவட்ட எல்லை ஒட்டிய மிகவும் ஆபத்தான வளைவு பகுதி உள்ளது.

    இந்தப் பகுதியை ஒட்டி ரயில்வே தண்டவாளமும் செல்வதால் பாதுகாப்பற்ற முறையில் நெடுஞ்சாலை வளைவு உள்ளது.

    இந்த நெடுஞ்சாலை வழியாக சேலம், ஓமலூர், கோயமுத்தூர், ஈரோடு போன்ற பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

    இந்தப் பகுதி இரு மாவட்ட எல்லை பகுதியாக உள்ளதால், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு செல்லாமல் உள்ளது.

    எனவே நெடுஞ்சாலைதுறையினர் இப்பகுதியில் ஆய்வு செய்து விரைவாக சாலை விரிவாக்கம் செய்து தடுப்பு சுவர்கள் ஏற்படுத்தித் தர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×