என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    பாலக்கோடு அருகேயுள்ள   பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் 4200 கன அடி உபரிநீர் வெளியேற்றம்
    X

    பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீர்.

    பாலக்கோடு அருகேயுள்ள பஞ்சப்பள்ளி சின்னாறு அணையில் 4200 கன அடி உபரிநீர் வெளியேற்றம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • உபரிநீர் 4200 கன வீதம் முழுவதும் வெளியேற்றி உள்ளனர்.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    பாலக்கோடு,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி சின்னாறு அணை சுற்றுவட்டார பகுதியில் தொடர்மழை பெய்தது. இந்த தொடர் மழையால் தளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட காப்புகாடு பகுதி களிலும் கனமழையின் காரணமாக அணை 2-வது முறையாக நிரம்பியது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி பொதுபணித்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உபரிநீர் 4200 கன வீதம் முழுவதும் வெளியேற்றி உள்ளனர்.

    50 அடி உயரம் கொண்ட அணையில் தற்போது 49.53 அடி உயரத்திற்கு நீர் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 4200 கன அடியாக உள்ளது. இதனால் பஞ்சப்பள்ளி, சாமனூர், மாரண்டஹள்ளி, அத்திமுட்லு, பாலக்கோடு, உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 4500 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறுகிறது.

    அணையில் இருந்து உபரிநீர் முழுவதும் வெளியேற்றப்படுவதால் ஆற்று கரையோர உள்ள பொதுமக்கள் ஆடு, மாடு உள்ளிட்டவை மேய்ச்சலுக்காக கொண்டு வர வேண்டாம் என்றும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை எடுத்துள்ளனர்.

    Next Story
    ×