என் மலர்
உள்ளூர் செய்திகள்

கள்ளக்காதல் விவகாரத்தில் வாலிபரை தாக்கி தலைமறைவாக இருந்த பஞ்சாயத்து தலைவர் கைது
- சிவசக்தி மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
- வனப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்த சிவ சக்தியை கைது செய்தனர்.
தருமபுரி,
தருமபுரி அடுத்த ஒட்டப் பட்டி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை தாக்கிய வழக்கில் தலைமறைவாக இருந்த ஜருகு பஞ்சாயத்து தலைவரும் தருமபுரி மாவட்ட பிஜேபி கட்சியின் துணை தலைவருமான சிவ சக்தியை நேற்று இரவு தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒட்டப்பட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் கால்வே அல்லி பகுதியைச் சேர்ந்த சின்னசாமியின் மகன் கணேசன் (32) என்பவருக்கும் அதே பகுதியை சார்ந்த தமிழரசி என்பவருக்கும் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒன்றை ஆண்டுகள் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தமிழரசி பிரிந்து தருமபுரி ஒட்டப்பட்டி பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் ஜருகு பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி என்பவருக்கும் தமிழரசிக்கும் காதல் மலர்ந்து சிவசக்தி 2-வதாக தமிழரசியை திருமணம் செய்து கொண்டு கணவன்-மனைவியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழரசி விவாகரத்து கோரி நீதிமன் றத்தை அணுகியுள்ளார். இந்த விஷயம் தெரிய வரவே கணேசன் நேரடியாக சென்று பேசிக் கொள்ளலாம் என நேற்று ஒட்டப்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அப்போது சிவசக்தி மற்றும் அவருடைய நண்பர்கள் 7 பேர் கொண்ட கும்பல் ஒன்றுசேர்ந்து கணேசனை கடுமையாக கொலைவெறி தாக்குதல் நடத்தி உள்ளனர்.இதில் படுகாயம் அடைந்த கணேசன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.
இது சம்பந்தமாக அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து மேற்படி ஜருகு பஞ்சாயத்து தலைவரும் தருமபுரி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத்தலைவர் மீது கொலை முயற்சி உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில் தன்மீது வழக்கு பதிவு செய்து தேடுவதை அறிந்த பஞ்சாயத்து தலைவர் சிவசக்தி தலைமறைவானார்.
தலைமுறைவான பஞ்சாயத்து தலைவரை பிடிப்பதற்காக தர்மபுரி எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுப் பாதம் உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் நேற்று இரவு வனப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தலைமறைவாக தங்கி இருந்த பஞ்சாயத்து தலைவர் சிவசக்தியை கைது செய்து அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறனர்.






