என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தை சிக்கிய கார்.
நல்லம்பள்ளி அருகே கார் மோதி தொழிலாளி பலி
- இவர் ஜாக்கிரி பிரிவு ரோடு அருகே நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்றார்.
- கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் திடீரென சைக்கிள் மீது மோதியது.
நல்லம்பள்ளி,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள பெரிய வீட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது52). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி.
நேற்று மாலை இவர் ஜாக்கிரி பிரிவு ரோடு அருகே நெடுஞ்சாலையை சைக்கிளில் கடக்க முயன்றார்.
அப்போது கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் திடீரென சைக்கிள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே தங்கவேல் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியானவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






