என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளி அருகே   மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த  லாரி கவிழ்ந்து விபத்து
    X

    லாரி கவிழ்ந்து கிடக்கும் காட்சி.

    நல்லம்பள்ளி அருகே மாட்டுத்தீவனம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து

    • தடுப்புகள் மீது ஏறியதில் நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.
    • விபத்தில் ஓட்டுநர் சிறிதளவு காயங்களுடன் உயிர் தப்பினார்.

    நல்லம்பள்ளி,

    தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் அமித் இவர் ஈரோட்டில் இருந்து மாட்டு தீவனம் லோடு லாரியில் ஏற்றிக்கொண்டு தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி நோக்கி வந்துள்ளார்.

    அதிகாலை 4 மணியளவில் தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள சேலம் பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சேசம்பட்டி பகுதியில் வந்தபோது லாரி ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

    அதனால் லாரி சேலம் பெங் களூரு தேசிய நெடுஞ்சா லையில் இருந்து சாலையோரம் உள்ள தடுப்புகள் மீது ஏறியதில் நிலைதடுமாறி தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள சர்வீஸ் ரோட்டில் கவிழ்ந்து விபத்துக்கு ள்ளானது.

    இந்த விபத்தில் ஓட்டுநர் சிறிதளவு காயங்கள் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவ மனையில் சேர்த்துள்ளனர்.

    மேலும் விபத்து குறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    Next Story
    ×