search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மேட்டூர் அருகே மாதேஸ்வரன் மலை கோவிலில் யுகாதி திருவிழா சிறப்பு பஸ்கள் இயக்கம்

    • இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.
    • குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலம் மாதேஸ்வரன் மலையில் அமைந்துள்ள மாதேஸ்வரன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தினசரி சென்று வருகிறார்கள்.

    குறிப்பாக யுகாதி, தசரா, சிவராத்திரி போன்ற திருவிழா காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்துவார்கள்.

    இங்கு வருகிற 22-ம் தேதி யுகாதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு இன்று மாதேஸ்வரன் சாமிக்கு தைலா அபிஷேகம் நடைபெறுகிறது. நாளை அமாவாசை சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. பின்னர் சேலம் மாவட்ட அய்யப்ப சேவா சங்கத்தின் மாவட்ட தலைவர் ராஜ மணிகண்டன் தலைமையில் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    22-ந் தேதி யுகாதியன்று, காலை 9.30 மணிக்கு தொடங்கி 10.30 மணி வரை பெரிய தேரோட்டம் நடைபெறும். திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே மாதேஸ்வர மலை கோவிலுக்கு சென்று வருகின்றனர்.

    இதையொட்டி மேட்டூர் பஸ் நிலையத்தில் இருந்து மாதேஸ்வரன் மலைக்கு செல்ல கர்நாடக மாநில சிறப்பு பஸ்களும், தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் பஸ் நிலையத்தில் எங்கு பார்த்தாலும், மாதேஸ்வரன் மலைக்கு செல்லும் பக்தர்கள் கூட்டமாக காட்சியளிக்கிறது.

    Next Story
    ×