என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மதிகோன்பாளையம் அருகே  ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு
    X

    மதிகோன்பாளையம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் சாவு

    • பெட்ரோல் பங்க் அருகே வந்த போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது.
    • ஆனால் வரும் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், மதிகோன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது58). ஆட்டோ டிரைவரான இவர் நேற்று திருப்பத்தூர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பெட்ரோல் பங்க் அருகே வந்த போது நிலை தடுமாறி ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்சில் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வரும் வழியிலேயே கோவிந்தராஜ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×