என் மலர்
உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற வாலிபர் சாவு
- பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது.
- உடன் சென்றவர் படுகாயம் அடைந்தார்.
கிருஷ்ணகிரி,
வேலூர் மாவட்டம் நவநீதம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் லோகேஷ் (20). இவர் தனது நண்பரான பெங்களூருவை சேர்ந்த பிரதீப் (29) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.
சென்னை-கிருஷ்ணகிரி சாலையில் பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இதில் தலையில் பலத்த அடிபட்ட லோகேசையும், படுகாயமடைந்த பிரதீப்பையும் அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் வழியிலேயே லோகேஷ் உயிரிழந்தார். பிரதீப்புக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






