என் மலர்
உள்ளூர் செய்திகள்

காரிமங்கலம் அருகே சூதாடிய 6 பேர் கைது
- அனுமந்தபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 6 பேரை கைது செய்து ரூ 4,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.
காரிமங்கலம்,
காரிமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளில் சூதாட்டம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தீவிர சோதனை மேற்கொள்ள தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் உத்தரவிட்டதை அடுத்து காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் காரிமங்கலம், பெரியாம்பட்டி, மாடலாம்பட்டி, அனுமந்தபுரம், மல்லி குட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது மல்லிகுட்டை அருகே காமலாபுரம் கிராமத்தில் மயானத்தின் அருகே உள்ள மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த காமலாபுரம் கிராமத்தை சேர்ந்த பெரியண்ணன் (வயது 35), கோபி (40), அருண்குமார் (35), கந்தசாமி (32), சிவசங்கர் (27), ராமியம்பட்டியை சேர்ந்த மேகவண்ணன் (41) ஆகிய 6 பேரை கைது செய்து ரூ 4,600 பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story






