என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே  புதிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும்  -சப்-கலெக்டரிடம், சங்க நிர்வாகிகள் மனு
    X

    ஓசூர் அருகே புதிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டுக்கு அனுமதி வழங்க வேண்டும் -சப்-கலெக்டரிடம், சங்க நிர்வாகிகள் மனு

    • ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழியிடம் கோரிக்கை மனு வழங்கினர்.
    • காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்

    ஓசூர்,

    ஓசூர் அருகே பத்தலபள்ளியில் உள்ள மொத்த காய்கறி மார்க்கெட் சங்கத்தின் சார்பில் , அதன் தலைவர் நாராயணன், துணைத்தலைவர் ரங்கநாத், செயலாளர் சீனிவாச ரெட்டி, இணை செயலாளர் கோவர்தன், பொருளாளர் ஆனந்தா, மற்றும் நிர்வாகி செல்வராஜ் ஆகியோர் நேற்று ஓசூர் சப்- கலெக்டர் தேன்மொழியிடம் ஒரு கோரிக்கை மனு வழங்கினர்.

    அதில், " கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே மொத்த காய்கறிகள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்தநிலையில், காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் வந்து செல்லும் வாகனங்களால், பொதுமக்கள் வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த காய்கறி மார்க்கெட்டை அருகில் உள்ள மோரனபள்ளி பகுதிக்கு மாற்றி, அங்கு , சுமார் 9 ஏக்கர் நிலத்தை வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து கூடாரம் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்ய ஏற்பாடு செய்துள்ளோம். எனவே, எந்தவித தடையுமின்றி அங்கு கூடாரம் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்ய அரசு அனுமதிக்க வேண்டும்". இவ்வாறு அந்த மனுவில் வியாபாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். மேலும் மனுவின் நகலை, ஓசூர் தாசில்தார் கவாஸ்கரிடமும் சங்க நிர்வாகிகள் வழங்கினர்.

    Next Story
    ×