search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அருகே  காய்கறி மார்க்கெட் அமைக்கவுள்ள புதிய இடத்திற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை?  -வியாபாரிகள் புகார்
    X

    போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள்.

    ஓசூர் அருகே காய்கறி மார்க்கெட் அமைக்கவுள்ள புதிய இடத்திற்கு அதிகாரிகள் முட்டுக்கட்டை? -வியாபாரிகள் புகார்

    • காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.
    • வியாபாரிகள் சங்கத்திற்கு ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

    ஓசூர்,

    ஓசூர் அருகே பத்தல பள்ளியில், கிருஷ்ணகிரி-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை அருகே மொத்த காய்கறிகள் விற்பனை மார்க்கெட் உள்ளது. இங்கு, 300-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இந்த நிலையில், காய்கறி மார்க்கெட்டுக்கு நாள்தோறும் வந்து செல்லும் வாகனங்களால், பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பள்ளி குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    எனவே, பொதுமக்க ளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த காய்கறி மார்க்கெட்டை அருகில் உள்ள மோரனபள்ளி பகுதிக்கு மாற்றும் நோக்கத்துடன், சுமார் 9 ஏக்கர் நிலத்தை, வியாபாரிகள் குத்தகைக்கு எடுத்து அங்கு கூடாரம் அமைத்து காய்கறிகளை விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், புதிய இடத்தில், அனுமதி பெறாமல் கடைகள் நடத்த கட்டுமான பணி நடைபெறுவதாகவும், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சார்பில், காய்கறி வியாபாரிகள் சங்கத்திற்கு ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

    இதேபோல், ஓசூர் வருவாய்த்துறை அதிகாரி களும் பிரச்சினை செய்வதாக காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் புகார் எழுப்பினர். மேலும், புதிய மார்க்கெட் செல்லும் வழியில் திடீரென கழிவுநீர் கால்வாய் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும், இந்த பிரச்சினைகள் அனைத்திற்கும், சூளகிரிக்கு கடைகளை மாற்றத்துடிக்கும் ஒரு சிலரின் தூண்டுதலே காரணம் என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

    இந்த விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, தங்களுக்கு நியாயம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இல்லையெனில் இன்னும் ஓரிரு நாட்களில் விவசாயிகளை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று சங்க தலைவர் நாராயணன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ரங்கநாத், நிர்வாகிகள் எம்.எம்.ராஜு, கோவர்தன் ஆகியோர் நிருபர்களிடம் கூறினர்.

    இதனிடையே தகவல் அறிந்து வந்த, ஓசூர் அட்கோ போலீசார் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். சங்க பிரதிநிதிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×