என் மலர்
உள்ளூர் செய்திகள்

குருபரப்பள்ளி அருகே மர்ம விலங்கு கடித்து 8 செம்மறி ஆடுகள் பலி
- காலையில் வந்து பார்த்தபோது 3 ஆட்டு குட்டிகள் உட்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தன .
- அங்கு வந்த அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரிசோதித்து மர்ம விலங்கு என்ன என்பதை தேடி வருகின்றனர்.
வேப்பனப்பள்ளி, செப்,25-
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள கொல்லப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஒபிலேசன்(வயது 45). இவர் 24 செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று இரவு வழக்கம் போல வீட்டின் முன்பு உள்ள கொட்டகையில் 24 ஆடுகளையும் விட்டுவிட்டு உறங்கச் சென்றுள்ளார்.
காலையில் வந்து பார்த்தபோது 3 ஆட்டு குட்டிகள் உட்பட 8 ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்த கிடந்தன .
ஒரு ஆட்டை மட்டும் மர்ம விலங்கு எடுத்து சென்றுள்ளது . ஆடுகள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து ஓபிலேசன் வனத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் இறந்த ஆடுகளை பரிசோதித்து மர்ம விலங்கு என்ன என்பதை தேடி வருகின்றனர். மர்ம விலங்கு ஊருக்குள் புகுந்து சுமார் எட்டு ஆடுகளை கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் ஆடு, மாடு வைத்திருக்கும் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.






