என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தருமபுரி அருகே  சந்து கடையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை
  X

  தருமபுரி அருகே சந்து கடையில் கள்ளத்தனமாக மதுவிற்பனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இந்த பகுதியில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.
  • காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர்.

  தருமபுரி,

  தருமபுரி மாவட்டம், அதியமான் கோட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்டது அவ்வைநகர். இந்தப் பகுதி தருமபுரி நகர் பகுதியை ஓட்டியுள்ளதால் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

  இந்தப் பகுதியில் ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற அலுவலகம், தனியார் மருத்துவமனை மற்றும் பள்ளி அருகாமையில் 24 மணி நேரமும் பார் வசதியுடன் சந்து கடையில் திருட்டு தனமாக அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

  இந்த பகுதியில் மது பிரியர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்து வருகிறது.

  காலையிலேயே அரசு மதுபான கடை திறக்காத காரணத்தினால் இங்கு வந்து மது பிரியர்கள் கூடுதல் விலை கொடுத்து அரசு மதுபானத்தை வாங்கி அங்கேயே இருக்கும் பாரில் குடித்து செல்கின்றனர்.

  அதன்பின்பு வெளியே வரும் குடிமகன்கள் சாலை ஓரம் நிற்கும் பெண்களிடம் அச்சுறுத்தும் வகையில் பேசி வருவதாக கூறப்படுகிறது.

  காலை நேரங்களில் வேலைக்கு செல்லும் பெண்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு பெண்கள் அதிக அளவில் வருகின்றனர்.

  குடிமகன்கள் தொல்லையால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பெண்கள் பயத்துடனே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர்.

  எனவே, அந்த பகுதியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு நலனை கருத்தில் கொண்டு ஏ.ஜெட்டிஅள்ளி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு செயல்படும் சந்து கடையை அகற்ற வேண்டும் என அப்பகுதி பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  Next Story
  ×