என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி அருகே  காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
    X

    தருமபுரி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

    • டிரைவராக வேலை பார்த்த இவர் தருமபுரியை அடுத்துள்ள பண்டார செட்டி அல்லி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.
    • திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் நேற்று அர்ச்சனா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தருமபுரி,

    திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அர்ச்சனா (வயது 26).

    இவர் திருப்பூரில் வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு டிரைவராக வேலை பார்த்த தருமபுரியை அடுத்துள்ள பண்டார செட்டி அல்லி பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவருடன் காதல் ஏற்பட்டது.

    பெற்றோர் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர். திருமணம் முடிந்து ஒன்றரை வருடங்களே ஆன நிலையில் நேற்று அர்ச்சனா தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    தகவல் அறிந்த பொம்மிடி போலீசார் அர்ச்சனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×