என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்பைநல்லூர் அருகே சனத்குமார் நதியின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் -பொதுமக்கள் கோரிக்கை
- பாலத்தின் இரு புறங்களிலும் பாதுகாப்பு சுவர்கள் ஏதும் இன்றி காணப்படுகிறது.
- மாணவ,மாணவியர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
மொரப்பூர்,
தருமபுரி அருகே இருந்து சனத்குமார் ஓடை உருவாகி பட்டகப்பட்டி அருகே சனத்குமார் நதியில் கலந்து கம்பைநல்லூர்,கெலவள்ளி வழியாக கூடுதுறைப்பட்டி அருகே தென்பெண்ணை ஆற்றில் சனத்குமார் நதி லக்கிறது.
இந்த சனத்குமார் நதி கெலவள்ளி-கே ஈச்சம்பாடி இடையே கடந்து செல்கிறது. இந்த சனத்குமார் நதியின் குறுக்கே தரைமட்ட பாலம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்தின் இரு புறங்களிலும் பாதுகாப்பு சுவர்கள் ஏதும் இன்றி காணப்படுகிறது.
வெள்ளம் ஆர்ப்பரித்து தரைப்பாலத்திற்கு மேலே செல்வதால் கே. ஈச்சம்பாடி, கே. ஈச்சம்பாடி அணை, கே.ஈச்சம்பாடி காலனி, சொர்ணம்பட்டி, ஒட்டுப்பட்டி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் இந்த சனத்குமார் நதியின் ஆற்றைக் கடந்து தான் கெலவள்ளி பகுதிக்கு வர வேண்டும்.
அதேபோல் கெலவள்ளி பகுதியில் உள்ள பொதுமக்கள் கே.ஈச்சம்பாடி பகுதிக்கு செல்ல வேண்டுமானால் இந்த ஆற்றை கடந்து தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் மழைக்காலங்களில் உபரி நீர் தரை பாலத்திற்கு மேல் அதிகமாக செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவியர்கள் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே இந்த தரைமட்ட பாலத்தை உயர்மட்ட மேம்பாலமாக மாற்ற வேண்டும் என்று பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நீண்ட நாட்களாக அரசு கோரிக்கை விடுத்து வந்தனர்.கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உயர் மட்ட மேம்பாலம் கட்டுவதற்கான அளவீடு பணிகள் முடிந்து திட்ட மதிப்புகள் தயார் பெற்று ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஆனால் இந்த திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை தற்போது சில தினங்களாக தருமபுரி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சரத்குமார் நதியில் வெள்ளம் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதனால் கிளம்பி அருகே உள்ள தரைமட்ட பணத்தை கடந்து செல்வதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.எனவே பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கெலவள்ளி- கே.ஈச்சம்பாடி இடையே சனத்குமார் நதியின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்ட வேண்டும் என சமூக அமைப்புகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.