என் மலர்
உள்ளூர் செய்திகள்

போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி பனங்காட்டூர் பகுதியில் பொதுமக்களிடையே கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு குறித்து அறிவுரை வழங்கும் பர்கூர் துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன்.
போச்சம்பள்ளி அருகே கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு
- பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
- நூலகங்களுக்கு சென்று புத்தக வாசிப்பை தொடர்ந்து படிக்க சொல்லுங்கள்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி பனங்காட்டூர் பகுதியில் பர்கூர் காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையில் கஞ்சா தடுப்பு விழிப்புணர்வு நடைபெற்றது.
இவ்விழிப்புணர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் கஞ்சா பயன்படுத்துவத்துவதாலும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், செயல் விளக்கம் அளித்து அறிவுரை வழங்கினார்.
அதனை தொடர்ந்து ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சியில் கஞ்சா செடிகளை வளர்க்காமல், அதை விற்பனை செய்யாமலும் மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யாத ஊராட்சி என கண்டறிந்து ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சிவசங்கரனுக்கும், துணைத் தலைவர் விஸ்வநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்தும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் மனோகரன் பொதுமக்களிடையே பேசும் போது மக்களாகிய நாம் அனைவரும் நாட்டு நடப்பு நிகழ்வுகளை அன்றாடம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இதில் குறிப்பாக பள்ளி குழந்தைகளை நாளிதழ் படிக்க செய்யுங்கள். நூலகங்களுக்கு சென்று புத்தக வாசிப்பை தொடர்ந்து படிக்க சொல்லுங்கள். உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பொதுக்களிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்பித்தினார்.
இக் கூட்டத்தில் போச்சம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபாவதி, எஸ்.ஐ.க்கள் குமார், சுதாகர் மற்றும் போலீசார் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.






