search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா நாளை தொடக்கம்
    X

    தஞ்சை பெரிய கோவிலில் நவராத்திரி கலை விழா நாளை தொடக்கம்

    • தினமும் மாலை பெரியநாயகி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
    • விழாவின் முதல் நாளான நாளை பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி கலை விழா நடைபெறுவது வழக்கம்.

    அதன் படி இந்த ஆண்டுக்கான நவராத்திரி கலை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது.

    அடுத்த மாதம் 4-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது.

    நவராத்திரி விழாவின் போது தினமும் பெரிய நாயகி அம்மனுக்கு காலை 7:30 மணிக்கு அபிஷேக ஆராதனையும், மாலை 6:30 மணிக்கு சிறப்பு அலங்காரமும் அதை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    விழாவின் முதல் நாளான நாளை பெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்படும். 26-ந் தேதி மீனாட்சி அலங்காரமும், 27-ந் தேதி சதஸ் அலங்காரமும், 28-ந் தேதி காயத்திரி அலங்காரமும், 29-ந் தேதி அன்னபூரணி அலங்காரமும் செய்யப்படும்.

    30-ந் தேதி பெரியநாயகி அம்மனுக்கு கெஜலட்சுமி அலங்காரமும், 1-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 2-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரமும், 3-ந் தேதி மகிஷாசுரமர்த்தினி அலங்காரமும், 4-ந் தேதி விஜயதசமி அலங்காரமும் செய்யப்படும்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் மாதவன், கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் செய்து வருகின்றனர்

    Next Story
    ×