search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா நாளை தொடக்கம்
    X

    காத்தாயி அம்மன்.

    நெல்லித்தோப்பு காத்தாயி அம்மன் கோவிலில் நவராத்திரி கலைவிழா நாளை தொடக்கம்

    • விழாவின் முதல் நாளான நாளை காத்தாயி அம்மன் ராஜமாதா அலங்காரத்தில் காட்சியளிக்கிறார்.
    • குரு ஓரையில் தங்கள் ஆசிரியர் தலைமையில் வித்யா ஆரம்பம் இசை, நடனம் பயிற்சி தொடங்க உத்தமம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அடுத்த கோவிலூர் நெல்லித்தோப்பில் காத்தாயி அம்மன் கோவில் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவில் பலரின் குல தெய்வமாக விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி நவநவமான பூஜா கலாபக் கலை விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு 16-ம் ஆண்டு நவராத்திரி விழா நாளை (திங்கள்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    விழாவை தஞ்சாவூர் பரதநாட்டிய கலைஞர்கள் சங்கம் தலைவி அருணா–சுப்பிரமணியம், புன்னை–நல்லூர் முத்துப்ப–ல்லக்கு விழாக்குழு துணை தலைவர் முருகு.வீரமணி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைக்கின்றனர்.

    விழாவின் முதல் நாளான நாளை காத்தாயி அம்மன் ராஜமாதா அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். காலை 6.45 மணிக்கு அம்மனுக்கு மங்களாபிஷேகம் செய்யப்ப–டுகிறது. பின்னர் சந்தி பூைஜ, தீபாராதனை காண்பி–க்கபடுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மதியம் 11 மணிக்கு சோடஷ உபசாரம், ஸ்வஸ்தி, உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம், மாலை 4.15 மணிக்கு விசேஷ அலங்காரம், மாலை சந்திபூஜை, தீபாராதனை, 5.15 மணிக்கு கலை விழா பூர்வாங்க பூஜைகள், மங்கல இசை நடைபெறும்.

    முதல் நாள் கொலு தர்பார் காட்சி நடைபெறும். மாலை 6 மணிக்கு தஞ்சை சிவரஞ்சனி நாட்டிய படன சாலை மாணவ-மாணவிகள் வழங்கும் மங்கள நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    27-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீபுவனேஷ்வரி அலங்காரம் செய்யப்படுகிறது. காலை 6.45 மணி முதல் மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகளும், கொலு தர்பார் காட்சியும் நடைபெறும். மாலை 7.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    28-ந் தேதி அம்மன் ஸ்ரீமாகாதேவி அலங்கா–ரத்தில் காட்சியளிப்பார். மாலை 6 மணிக்கு இசை வாத்திய நிகழ்ச்சியும், நாட்டிய நிகழ்ச்சியும் நடக்கும்.

    29-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீகஜலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு நாத இசை சங்கமும், 7.30 மணிக்கு மாணவ-மாணவிகளின் நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

    30-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு தனலட்சுமி அலங்காரம் செய்யப்படுகிறது. மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சியும், 7.30 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    1-ந் தேதி வீரலட்சுமி அலங்காரத்தில் காத்தாயி அம்மன் காட்சியளிக்க உள்ளார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு பரதநாட்டியம் நடைபெறும்.

    2-ந் தேதி காத்தாயி அம்மன் ஸ்ரீமூகாம்பிகை அலங்காரத்தில் காட்சியளி–ப்பார். மாலை 6 மணிக்கு வீணை கச்சேரியும், 7.30 மணிக்கு பரதநாட்டியமும் நடைபெறும்.

    3-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீசாவித்ரி அலங்காரம் செய்யப்ப–டுகிறது. மாலை 6 மணிக்கு நாதஸ்வரம், 7.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சியும் நடைபெறும்.

    4-ந் தேதி காத்தாயி அம்மனுக்கு ஸ்ரீசரஸ்வதி அலங்காரம் செய்யப்ப–டுகிறது மாலை 7.30 மணிக்கு நாட்டிய நிகழ்ச்சி நடைபெறும்.

    5-ந் தேதி ஸ்ரீபரமேஸ்வரி அலங்காரத்தில் காத்தாயி அம்மன் காட்சியளிப்பார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மங்கள இசை நிகழ்ச்சி நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் காலை 6.45 மணிக்கு அம்மனுக்கு மங்களாபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் சந்தி பூைஜ, தீபாராதனை காண்பிக்கபடுகிறது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது.

    மதியம் 11 மணிக்கு சோடஷ உபசாரம், ஸ்வஸ்தி, உச்சிகால பூஜை, தீபாராதனை, பிரசாதம், மாலை 4.15 மணிக்கு விசேஷ அலங்காரம், மாலை சந்திபூஜை, தீபாராதனை, 5.15 மணிக்கு கலை விழா பூர்வாங்க பூஜைகள், மங்கல இசை நடைபெறும். கொலு தர்பார் காட்சி நடைபெறும்.

    மேலும் நாளை முதல் அடுத்த மாதம் 5-ந் தேதி வரை நவராத்திரி கொலு தர்பார் மண்டபத்தில் அம்பிகையின் முன்னிலையில் வாய்ப்பாட்டு, வீணை, வயலின், ஆர்மோனியம், புல்லாங்குழல், மிருதங்கம், தபேலா, கடம், கஞ்சிரா முகர்சிங், நாதஸ்வரதம், தவில், கிளாரிநெட், கிடார், கீ போர்டு, பியானோ போன்ற கலைகளை சமர்பிக்கலாம். அரங்கேற்றமும் செய்விக்கலாம்.

    10-வது நாள் விஜயதசமி அன்று வித்யாப்பியாசம் தொடங்கலாம். அன்று காலை 9 மணிக்கு மேல் குரு ஓரையில் தங்கள் ஆசிரியர் தலைமையில் வித்யா ஆரம்பம்- இசை, நடனம் பயிற்சி தொடங்க உத்தமம்.

    முன்னதாக இன்று மகாளய அமாவாசையை முன்னிட்டு தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வரபூஜை சங்கல்பம், புண்யாகவசனம், பஞ்சகவ்ய சுத்தி, பஞ்ச பாலிகா, நெல், எள், கடுகு, பயிறு, உளுந்து, முளைப்பாரி ஈடுதல் நடைபெற்றது. கொலு மண்டபம் அமைக்கப்பட்டது.

    மேலும் விவரங்களுக்கு காத்தாயி அடிமையும் அறங்கா–வலருமான ப.சுவாமிநாதன் முனையதிரியரை 9944889026 என்ற எண்ணில் பக்தர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×