search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்
    X

    மரக்கன்று நடவு செய்த போது எடுத்தபடம்.

    நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம்

    • ஆங்கிலத்துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.
    • உள்ளமும் உடலும் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், எந்த வகையான உணவுகளை, எந்த வேலையில் எவ்வாறு உண்ண வேண்டும்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இந்த சிறப்பு முகாம் நிகழ்ச்சிக்கு பென்னாகரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார்.

    ஆங்கிலத்துறை இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவர் நந்தகுமார் அனைவரையும் வரவேற்று பேசினார்.

    இம்முகாமில் நாட்டு நலப்படுத்திட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்தூய்மை, மரக்கன்று நடுதல் மற்றும் நெகிழி பொருட்களை அப்புறப்படுத்தும் பணியினை சிறப்பாக செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் முனுசாமி மற்றும் நாகதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயச்சந்திரபாபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    இதில் உள்ளமும் உடலும் வலிமை பெற்று ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், எந்த வகையான உணவுகளை, எந்த வேலையில் எவ்வாறு உண்ண வேண்டும்.

    மேலும் தவிர்க்க வேண்டிய உணவு வகைகளைப்பற்றி மிகச் சிறப்பாக மாணவர்களிடையே எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். முடிவில் இளங்கலை கணினி அறிவியல் துறை மாணவி பாக்கியலட்சுமி நன்றி கூறினார்.

    Next Story
    ×