என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மகாராஷ்டிராவில் தேசிய ஒருமைப்பாடு முகாம் : சிக்கண்ணா கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
    X

    மகாராஷ்டிராவில் தேசிய ஒருமைப்பாடு முகாம் : சிக்கண்ணா கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்பு

    • பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 10 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய ஒருமைப்பாடு முகாமிற்கு செல்கிறார்கள்.
    • பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பேராசிரியர்கள் மற்றும் அலகு - 2 மாணவ மாணவிகள் வழியனுப்பி வைத்தனர்.

    திருப்பூர் :

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மூலம் நாட்டில் உள்ள நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்ளும் தேசிய ஒருமைப்பாடு முகாம் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெறுகிறது. இம்முகாமில் மேற்கு வங்காளம், ஒடிசா, ராஜஸ்தான், அசாம், மத்தியப்பிரதேசம், உத்திரகண்ட், புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, மேகாலயா போன்ற மாநிலத்தில் இருந்து நாட்டு நலப்பணித் திட்ட மாணவ மாணவிகள் கிட்டத்தட்ட 250 பேர் கலந்து கொள்ள உள்ளனர். அதில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 10 மாணவ மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய ஒருமைப்பாடு முகாமிற்கு செல்கிறார்கள்.

    திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு-2வில் இருந்து சௌமியா ( முதலாமாண்டு விலங்கியல் துறை ), பாக்கியலட்சுமி ( 3-ம் ஆண்டு விலங்கியல் துறை), பூபதி ராஜா ( 2-ம்ஆண்டு வேதியியல் துறை ) ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து இவர்கள் 3 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வாய்ப்பு கல்லூரிக்கு கிடைத்த பெருமை என்று கல்லூரி முதல்வர் கூறினார். தேசிய ஒருமைப்பாடு முகாமில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மாநில கலாச்சாரம், அரசு திட்டம், ஒரே பாரதம் உன்னத பாரதம் திட்டம், தொழிற்சாலைகளை பார்வையிடுதல், வளமான இந்தியாவிற்கான விழிப்புணர்வு,தூய்மை இந்தியா திட்டம் போன்றவை பற்றி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த 3 மாணவ மாணவிகளை மண்டல இயக்குநர் சாமுவேல் செல்லையா, கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், மாநில அலுவலர் செந்தில் குமார், பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, பேராசிரியர்கள் மற்றும் அலகு - 2 மாணவ மாணவிகள் வழியனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×