search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்
    X

    ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்

    • உயிரி எரிபொருள் பற்றிய அறிவைப் பொழிந்து, மாணவர்கள் தங்கள் திட்டங்களுக்கான காப்புரிமையை பதிவு செய்ய ஊக்குவித்தார்.
    • தடுப்பூசி தயாரிப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    ஓசூர்,

    ஓசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியின் உயிர்தொழில்நுட்பத் துறை சார்பில் ",உயிரி தொழில்நுட்பவியலின் எதிர்காலப்போக்குகள் மற்றும் உயிரி மருத்துவ தொழில்களில் அதன் பயன்பாடு' என்ற தலைப்பில், 2 நாள் தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது.

    அதியமான் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ரங்கநாத் தலைமை தாங்கி, கரோனா நிலைமை மற்றும் அந்த காலகட்டத்தில் உயிரி தொழில்நுட் பவியலாளர்களின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினார்.

    இறுதி ஆண்டு மாணவர் பரத் மாநாட்டில் துறையின் ஆண்டு செயல்பாடுகள் குறித்து விளக்கினார்.

    முதன்மை விருந்தினராக கலந்துகொண்ட, பெங்களூரு, விப்ரோ அறிவியல் ஆய்வகங்களின் தலைவர், சையத் சல்மான் லத்தீப், ஆய்வக செயல்முறைகள் மற்றும் அவர்களின் ஆய்வகங்களில் வழங்கப்படும் இன்டர்ன்ஷிப் சலுகைகள் குறித்து விளக்கி பேசினார்.

    கவுரவ விருந்தினராக, பெங்களூரு சின்ஜின் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவன துணை மேலாளர் ஜெயந்திரன், ஆய்வக சூழல் மற்றும் பல்வேறு ஆய்வக உபகரணங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார்.

    சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குன்னூர் பாஸ்டர் இன்ஸ்டிட்யூட் ஆப் இந்தியா ஆராய்ச்சி அதிகாரி, ஜெகநாதன், தடுப்பூசி தயாரிப்பு குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

    மாநாட்டின் இரண்டாவது நாளில், அழைக்கப்பட்ட முன்னாள் மாணவியும், பெங்களூரு, ஆன்தம் பயோசயின்சஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாளருமான திவ்யா சூரியபிரகாஷ், கல்லூரி நாட்களில் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் டாக்டர் ரெங்கநாதன், உயிரி எரிபொருள் பற்றிய அறிவைப் பொழிந்து, மாணவர்கள் தங்கள் திட்டங்களுக்கான காப்புரிமையை பதிவு செய்ய ஊக்குவித்தார்.

    கல்வி மற்றும் விளை யாட்டு நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆராய்ச்சி கட்டுரைகள் சமர்ப்பித்தனர்.

    சிறப்பு அழைப்பாளர் குருமூர்த்தி (இயற்கை விவசாயம், வேளாண்மைப் பயிற்சியாளர்) மண்புழு உரம், உயிர் பூச்சிக்கொல்லிகள் மற்றும் வறண்ட நிலத்தை பயிரிடுவதற்கு வளமான நிலமாக மாற்றுவது குறித்து விவாதித்தார்.

    துறை இணை பேராசிரியர் டாக்டர். சரண்யா மற்றும் உதவி பேராசிரியர்கள் கவிதா, நான்சி சில்வியா, கிறிஸ்டினா, மணி ஸ்ரீதர் ஆகியோர் மாநாட்டை ஒருங்கிணைத்தனர். முடிவில், மாணவர் ஒருங்கிணைப்பாளர் ஹர்ஷிதா நன்றி கூறினார்.

    Next Story
    ×