search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம்
    X

    அரசு பள்ளியில் தேசிய அறிவியல் தினம்

    • நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.
    • அறிவியல் ஆக்கத்திற்கு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்து ள்ள சின்னப்பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தினம் கொண்டாடப்பட்டது.

    சர் சி.வி.ராமன் கண்டுபிடித்து வெளியிட்ட ராமன் விளைவு உலகிற்கு அறிவிக்கப்பட்ட நாள் தேசிய அறிவியல் தினமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த தினத்தை முன்னிட்டு வானவில் மன்றம் மற்றும் அறிவியல் மன்றம் இணைந்து மாணவர்களுக்கு பரிசோதனைகள் அறிவியல் அறிஞர்கள் வாழ்க்கை வரலாறு அறிவியல் அறிஞர்களின் தத்துவங்கள் அறிவியல் ஆக்கத்திற்கு என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் ஆசிரியர் கல்பனா மற்றும் வானவில் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஸ்டெம் அம்பாசிடர் பிரியா ஆகியோர் செய்து காட்டினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனி தேசிய அறிவியல் தின உறுதிமொழியையும் இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் தின கருப்பொ ருளான உலக நலனுக்கான உலக அறிவியல் என்பது பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, ரேகா, ராஜேஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×