search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா
    X

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா

    • பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
    • பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி பாரத் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியில் விஞ்ஞானி சர்.சி.வி.ராமன் பிறந்த நாளை முன்னிட்டு தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.

    இதை பாரத் கல்வி குழுமங்களின் நிறுவனர் மணி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசும் போது இன்று நாம் அறிவியல் உலகத்தில் வாழ்ந்து வருகிறோம். அறிவியல் மனிதர்களுக்கு தேவையான உபகரணங்களை அளித்துள்ளது. முக்கியமாக தொலை தொடர்பு துறையில் வியக்கத்தகு பங்கை அளித்துள்ளது என தெரிவித்தார்.

    இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் நூற்றுக்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தி இருந்தனர். விழாவில் சிறந்த அறிவியல் படைப்புக்கு 8-ம் வகுப்பு மாணவி அனீஸ் என்பவருக்கு தங்க நாணயத்தை, பள்ளியின் நிறுவனர் மணி வழங்கினார். மேலும் 2 மற்றும் 3-ம் இடம் பிடித்த சிறந்த படைப்புகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கினார்.

    விழாவின் முடிவில் பள்ளியின் முதல்வர் விஜயகுமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் நசீர்பாஷா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் செய்திருந்தனர்.

    Next Story
    ×