search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தேசிய கைத்தறி சிறப்பு காண்காட்சி
    X

    கைத்தறி கண்காட்சியை கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திண்டுக்கல்லில் தேசிய கைத்தறி சிறப்பு காண்காட்சி

    • சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தின விழா கொண்டாட ப்பட்டு வருகிறது.
    • கைத்தறி கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    திண்டுக்கல்:

    ஆகஸ்டு 7-ந் தேதியன்று சுதேசி இயக்கத்தை நினைவு கூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய கைத்தறி தின விழா கொண்டாட ப்பட்டு வருகிறது. அதன்படி 8-வது தேசிய கைத்தறி தின விழாவை திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிச்சாண்டி அரங்கில் இன்று கலெக்டர் விசாகன் தொடங்கி வைத்தார்.

    75-வது சுதந்திர தின விழா மற்றும் அமுதம் திரு விழாவை முன்னிட்டு இந்த கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் கைத்தறி நெசவாள ர்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இக்கண்காட்சி இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது.

    கண்காட்சியில் திண்டு க்கல் மாவட்டத்தில் உள்ள கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் மென்பட்டு, காட்டன், கேரளா காட்டன், செயற்கை பட்டு, பாரம்பரிய டை, டை காட்டன், பம்பர் காட்டன் சேலைகள் காட்சிபடுத்த ப்பட்டு இருந்தன. இதனை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு வாங்கிச் சென்றனர். நிகழ்ச்சியில் திண்டுக்கல் கைத்தறி துறை உதவி இயக்குனர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×