search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வானில் அற்புதமான நிகழ்வு- சந்திரனுக்கு அருகே மின்னிய வெள்ளி கிரகம்
    X

    வானில் அற்புதமான நிகழ்வு- சந்திரனுக்கு அருகே மின்னிய வெள்ளி கிரகம்

    • சுக்கிரன், சந்திரனுக்கு அருகில் காணப்பட்ட அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது.
    • உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்குபவர்களை மகிழ்வித்தது.

    வானில் பல அதிசய நிகழ்வுகள் நடைபெறுகிறது. அந்த வகையில் சூரிய குடும்பத்தில் பிரகாசமான கிரகமான வெள்ளி கிரகம், சந்திரனுக்கு அருகில் மின்னிய அற்புதமான காட்சியை நாசா டுவிட்டரில் வெளியிட்டு இருந்தது. மிகவும் அரிய வான நிகழ்வுகளில் ஒன்றான இந்த காட்சி உலகெங்கிலும் உள்ள வானத்தை நோக்கு பவர்களை மகிழ்வித்தது.

    சந்திரனின் இருண்ட விளிம்புக்கு பின்னால் வெள்ளி மெதுவாக மறைந்ததால் இரண்டும் ஒரே பார்வையில் தோன்றின. ஒன்றாக இணைந்தன. இந்த காட்சி டுவிட்டரில் வெளியாகி வைரலாக பரவியது. இதைத் தொடர்ந்து பயனாளர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் வருகிற 28-ந்தேதி இரவு சந்திரன் உள்பட 5 கிரகங்கள் வானில் தெரியும் என கூறப்பட்டுள்ளது. இந்த 5 கிரகங்களும் நேர்கோட்டில் இல்லாமல் ஆர்ச் போல காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி வருகிற 28-ந்தேதி சூரியன் மறைவுக்கு பிறகு நீங்கள் பார்க்கக்கூடிய கிரகங்களில் செவ்வாய், வீனஸ், வியாழன், புதன் மற்றும் யுரேனஸ் ஆகியவை அடங்கும். வியாழன் புதனை விட பிரகாசமாக காணப்படும். அதே சமயம் வீனஸ் அனைத்து கிரகங்களையும் விட பிரகாசமான கிரகமாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    அதாவது வியாழன் மற்றும் புதனின் மேல் இடது புறத்தில் வீனஸ் பிரகாசமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது. எல்லா வற்றிலும் மிகவும் திகைப்பூட்டும் வீனஸ் கிரகத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×