என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் பகுதியில் வரத்து குறைவால் பூக்கள் விலை உயர்வு
- பூக்கள் தினசரி ஏல 2 மார்க்கெட்டிற்கும் கொண்டு வருகின்றனர்.
- வரத்து குறைந்ததால், பூக்கள் விலை உயர் வடைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியான தண்ணீர் பந்தல், வட கரை யாத்தூர், காளிபாளையம், ஆனங்கூர், பாகம்பாளை யம், சின்ன மருதூர், பெரிய மருதூர், நாக பாளையம், செல்லப்பம் பாளையம், அண்ணா நகர் மற்றும் கரூர் மாவட்டம், வேலாயுதம் பாளையம் சுற்று வட்டாரப் பகுதிகளில் குண்டு மல்லிகை, முல்லை பூ, சம்பங்கி, ரோஜா, செவ்வந்தி, அரளி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை, விவசாயிகள் உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பரமத்திவேலூர் பஸ் நிலையம் மற்றும் அருகில் உள்ள பூக்கள் தினசரி ஏல 2 மார்க்கெட்டிற்கும் கொண்டு வருகின்றனர்.
இதனை வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம் பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் வந்து வாங்கி செல்கின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லிகை கிலோ ரூ.280-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.160-க்கும், முல்லைப் பூ ரூ.300-க்கும், செவ்வந்திப்பூ ரூ.200-க்கும், கனகாம்பரம் ரூ.350-க்கும் ஏலம் போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.380-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.120-க்கும், ரோஜா ரூ.220-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.260-க்கும், கனகாம்பரம் ரூ.450-க்கும் ஏலம் போனது.
வரத்து குறைந்ததால், பூக்கள் விலை உயர் வடைந்துள்ளதாக வியா பாரிகள் தெரிவித்தனர். இதனிடையே பூக்கள் விலை உயர்ந்துள்ளதால் பூ பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






