என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் புதன் சந்தையில்  ரூ.2 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்
    X

    நாமக்கல் புதன் சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் வர்த்தகம்

    • கேரளாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர்.
    • இதில், இறைச்சி மாடுகள் 18 ஆயிரம் ரூபாய்க்கும், கன்று குட்டிகள் 9 ஆயிரம் ரூபாய்க்கும், பசு மாடுகள் 19 ஆயிரம் ரூபாய்க்கும், எருமை மாடுகள் 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த புதன் சந்தையில் நேற்று காலை 5 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை மாட்டு சந்தை நடந்தது. இதில் கேரளாவில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்திருந்தனர். கோவை, சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து பசு, எருமை கன்று குட்டிகள், கொல்லிமலை காளை மாடுகள் உட்பட அனைத்து வகையான மாடுகளையும் விற்பனை கொண்டு வந்தனர். இதில், இறைச்சி மாடுகள் 18 ஆயிரம் ரூபாய்க்கும், கன்று குட்டிகள் 9 ஆயிரம் ரூபாய்க்கும், பசு மாடுகள் 19 ஆயிரம் ரூபாய்க்கும், எருமை மாடுகள் 24 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று ஒரே நாளில் மொத்தம் 2 கோடி ரூபாய்க்கு மாடுகள் விற்பனையானதாக வியா பாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×