என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டம்
    X

    தூய்மை பணியாளர்கள் 2-வது நாளாக முற்றுகை போராட்டம்

    • வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • கவுன்சிலர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிக்கு செல்வோம் என கூறியும், பாது காப்பு கேட்டும் பணியை புறக்க ணித்து பேரூராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகை யிட்டனர்.

    பரமத்தி வேலூர்:

    வேலூர் பேரூராட்சியில் உள்ள தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் குப்புச்சிபாளையம் 6- வது வார்டு பகுதியில் பெண் மற்றும் ஆண் தூய்மை பணி யாளர்கள் முட்செடிகளுக்கு தீவைத்து அருகில் பரவாமல் பார்த்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    அப்போது அங்கு வந்த தி.மு.க வைச் சேர்ந்த 6-வது வார்டு உறுப்பினர் பெண் தூய்மை பணியாளர்களை உங்களை இங்கு யார் தீவைக்க சொன்னது என்று கூறி பெண் தூய்மை பணியா ளர்களை ஆபாச வார்த்தைகளால் பேசியதாக தெரிகிறது. இதனை கண்டித்து நேற்று முன்தினம் தூய்மை பணியாளர்கள் வேலூர் பேரூராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி தூய்மை பணியாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி தரக்குறைவாக பேசிய வார்டு உறுப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதனை யடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் நேற்று முன்தினம் இரவு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    போலீசில் புகார்

    இந்த நிலையில் நேற்று காலை 5- மணிக்கு பணிக்கு வந்த தூய்மை பணியாளர்கள் காலை 10-மணி வரை தூய்மை பணியில் ஈடுபட்ட னர். பின்னர் கவுன்சிலர் மீது பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பணிக்கு செல்வோம் என கூறியும், பாது காப்பு கேட்டும் பணியை புறக்க ணித்து பேரூராட்சி அலுவலகத்தை மீண்டும் முற்றுகை யிட்டனர். பின்னர் வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி, அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி உங்க ளுடைய கோரிக்கையை மனுவாக எழுதிக் கொடுங்கள் அதன்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் அடிப்படையில் தூய்மை பணி யாளர்கள் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் மனு எழுதிக் கொடுத்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    Next Story
    ×