என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நல்லம்பள்ளி ஒன்றியம் நத்தஅள்ளியில் உள்ள    மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா
    X

    நல்லம்பள்ளி ஒன்றியம் நத்தஅள்ளியில் உள்ள மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா

    • கோவிலுக்கு பால் கூட ஊர்வலம் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது.
    • புனித நீரானது கோவிலை சுற்றி காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் நத்தஅள்ளி கிராமத்தில் உள்ள விநாய கர்,மாரியம்மன்,தேவி ,பெருமாள் மூலவர் பூதேவி மேத திருக்கோவில் திருப்பணிகள் நடைபெற்று திருக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கு பெரியோர்களால் முடிவெடுக்கப்பட்டு அதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

    முதல் நிகழ்வாக கோவிலுக்கு பால் கூட ஊர்வலம் தீர்த்தகுட ஊர்வலம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கோவிலில் முதல் கால யாக பூஜை மற்றும் இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று வந்தன. யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்ட தீர்த்த குடங்கள் ஊர்வலமாக கோவிலை சுற்றி வரப்பட்டு கோவில் விமான கோபுரங்களுக்கு கொண்டுவரப்பட்டது.

    வேத மந்திரங்கள் முழங்க மங்கள இசை உடன் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட திருத்தக்குடங்கள் கலசங்களுக்கு ஊற்றப்பட்டது. கருவறையில் உள்ள விநாயகர், மாரியம்மன், வைகுண்ட பெருமாள் உள்ளிட்ட தெய்வங்களுக்கு புனித நீரானது ஊற்றபட்டது. பூஜைகள் நிறைவடைந்த பின் புனித நீரானது கோவிலை சுற்றி காத்திருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. கோவில் கும்பாபிஷேகத்தில் தொடர்ந்து 48 நாள் மண்டல பூஜை நடைபெறுகிறது‌. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    கோவில் கும்பாபிஷேக விழா நிகழ்வுகள் அனைத்தையும் விழா குழுவினர், ஊர் பெரியோர் ஒன்றிணைந்து செய்திருந்தனர்.

    Next Story
    ×