search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாச்சிகுப்பம் அரசு பள்ளியில்  விளையாட்டு போட்டிகளில் சாதனை  படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு
    X

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமையில் வட்டார கல்வி அலுவர் மரியா ரோஸ் பரிசுகளை வழங்கினார்.

    நாச்சிகுப்பம் அரசு பள்ளியில் விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு

    • பள்ளி குழந்தைகளின் தனித்திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.
    • பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    வேப்பனப்பள்ளி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனபள்ளி அருகே உள்ள நாச்சிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளி எப்போது மற்ற அரசு பள்ளிகளை விட தனித்துவமாக செயல்பட்டு பள்ளி குழந்தைகளின் தனித்திறமையை வெளி கொண்டு வந்து சாதிக்கும் வகையில் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இதை மீண்டும் நிரூபிக்கும் வகையில் பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு பள்ளி மாண வர்களுக்கு பல்வேறு வித்தியாசமான போட்டிகள் நடத்தப்பட்டது.

    இதில் கலந்து கொண்ட பள்ளி குழந்தைகள் பலூன் வைத்து நடத்தல், கண்ணை கட்டி முட்டை உடைத்தல், தண்ணீரில் ஆப்பிள் சாப்பிடுதல், கண்ணை கட்டி தண்ணீர் ஊற்றுதல், சைக்கிள் போட்டிகள், பிஸ்கட் மீது காசு வைத்தல், செங்கல் மீது நடத்தல், காலால் முறுக்கு சாப்பிடுதல், மாவு பிஸ்கட் சாப்பிடுதல் என வித்தியாசமான முறையில் பள்ளி குழந்தைகளுக்கு போட்டியில் நடத்தப்பட்டது.

    இந்த போட்டியில் அனைத்திலும் விறுவிறுப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பரிசுகளை தட்டிச் சென்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் விஜயா தலைமையில் வட்டார கல்வி அலுவர் மரியா ரோஸ் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

    மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் சந்திரகலா, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    அரசு பள்ளியில் இது போன்று வித்தியா சமான முறையில் பள்ளி குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டது.

    இப்பகுதி பெற்றோர்களையும் பொதுமக்களையும் வெகுவாக கவர்ந்தது. மேலும் பள்ளி நிர்வாகத்தை பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

    Next Story
    ×