search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சூளகிரி பகுதிகளில் தீ வைக்கும் மர்ம ஆசாமிகள்
    X

    சூளகிரி பகுதிகளில் தீ வைக்கும் மர்ம ஆசாமிகள்

    • வெயில் அடிப்பதால் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறிவிட்டன.
    • காய்ந்த இலைகள் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி சுற்று வட்டார பகுதியில் ஒரு மாதமாக அதிகாலையில் பனி பெய்து வருகிறது. இதற்கு நேர்மாறாக காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அதிக அளவில் வெயில் அடிப்பதால் செடி கொடிகள் காய்ந்து சருகாக மாறிவிட்டன.

    சுண்டகிரி, மேலுமலை, குருபராத்தப் பள்ளி, கோப சந்திரம் மற்றும் பல பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலையின் ஒரமாக பல பகுதியில் சிலர் நெருப்பு வைத்து வருவதால் காய்ந்த இலைகள் செடி, கொடிகள் எரிந்து சாம்பலாகி வருகிறது.

    தற்போது சூளகிரி பேருந்து நிலையம் நுழைவு வாயிலில் உள்ள அரசுக்கு சொந்தமான குட்டை நில பகுதியில் உள்ள முட்புதர்களுக்கு யாரோ நேற்று மாலை நெருப்பு வைத்ததால் நெருப்பு பற்றி கொளுந்து விட்டு எரிந்தது.

    இங்கு அதிக குடியிருப்புகள் இருப்பதாலும், சாலையில் வாகனங்கள் அதிக அளவில் சென்று வருவதால் பொது மக்கள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகினர்.

    இதனையடுத்து சூளகிரியில் தீயணைப்பு நிலையம் இல்லாததால் மற்ற பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து இங்கேயே நிறுத்தி வைக்க வேண்டும் என ெபாதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×