என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் அருகே விவசாயி கொலை: 3 பேரை பிடித்து விசாரணை
- மின்சார ஒயர் கம்பியால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
- சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள சிட்லிங் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன். இரவு நேரத்தில் காவலுக்காக தோட்டத்தில் உள்ள கொட்டகையில் படுத்திருந்திருக்கிறார்.
காலை 8 மணிக்கு வீட்டிற்கு பால் எடுத்து வருவது வழக்கம். நீண்ட நேரம் தோட்டத்திலிருந்து வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி தங்கம்மாள் தோட்டத்திற்கு சென்று பார்த்த பொழுது கழுத்தில் மின்சார ஒயர் கம்பியால் கழுத்து நெறிக்கப்பட்டு இறந்த நிலையில் கிடந்தார்.
சம்பவம் குறித்துதங்கம்மாள் தனது உறவினர்களுக்கு தகவல் கொடுத்திருக்கிறார். உறவினர்கள் அனைவரும் தோட்டத்திற்கு சென்று பார்த்த பிறகு இது குறித்து கோட்டப்பட்டி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி தருமபுரி மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில் கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






