என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர் பிடிப்பில் கன மழை 117 அடியாக உயர்ந்த முல்லைப்பெரியாறு நீர் மட்டம்
    X

    கோப்பு படம்.

    நீர் பிடிப்பில் கன மழை 117 அடியாக உயர்ந்த முல்லைப்பெரியாறு நீர் மட்டம்

    • கிட்டத்தட்ட 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்று 2113 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2605 கன அடியாக அதிகரித்துள்ளது.
    • முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு கன மழை பெய்து வருகிறது. இதனால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் கன மழை பெய்து அணைக்கு நீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக 600, 1200, 2123 என நீர் வரத்து படிப்படியாக உயர்ந்த நிலையில் இன்று காலை அணைக்கு 2605 கன அடி நீர் வருகிறது. நேற்று காலை 115.80 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று காலை 116.90 அடியாக உயர்ந்துள்ளது.

    கிட்டத்தட்ட 2 நாட்களில் அணையின் நீர் மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே போல் நேற்று 2113 கன அடியாக இருந்த நீர் வரத்து இன்று காலை 2605 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அணையில் இருந்து 356 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. 2069 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. இடுக்கி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் தொடர்ந்து உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்டு மதுரை குடிநீருக்கு மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. மழை நின்றதாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை இல்லாததாலும் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வந்தது.

    கடந்த 1 மாதமாக அணைக்கு நீர் வரத்து இல்லாத நிலையில் இன்று காலை முதல் வைகை அணைக்கு 94 கன அடி நீர் வருகிறது. அணையின் நீர் மட்டம் 49.97 அடியாக உள்ளது. அணையில் இருந்து 69 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1988 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 47.95 அடி. வரத்து 10 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 86.60 அடி. திறப்பு 3 கன அடி.

    பெரியாறு 53, தேக்கடி 40, கூடலூர் 3.5, உத்தமபாளையம் 2.2, சண்முகாநதி அணை 4, சோத்துப்பாறை 2, பெரியகுளம் 2, வீரபாண்டி 7.2, அரண்மனைபுதூர் 2.4, மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×