என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடைக்கானல் பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து எம்.பி.ஆய்வு
- கொடைக்கானல் மேல் மலை பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி, உள்ளிட்ட கிராம பகுதிகளில் வேலுச்சாமி எம்.பி. ஆய்வு செய்தார்.
- பள்ளி கட்டிட பணி, சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மேல் மலை பூம்பாறை, மன்னவனூர், கூக்கால், கவுஞ்சி, உள்ளிட்ட கிராம பகுதிகளில் வேலுச்சாமி எம்.பி. ஆய்வு செய்தார். இந்த பகுதிகளில் நடைபெற்று வரும் பள்ளி கட்டிட பணி, சாலை மேம்பாட்டு பணி உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
மேல்மலைப்பகுதிகளில் பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு டவர் அமைப்பதற்குரிய இடங்கள், வட்டக்கானல் பகுதியில் தொலைத்தொடர்பு டவர் அமைப்பதற்குரிய இடங்களையும் ஆய்வு செய்தார். இப் பகுதியில் டவர் அமைப்பதன் மூலம் வெள்ளக்கவி, சின்னூர், பெரியூர் உள்ளிட்ட மிகவும் பின் தங்கிய மலை கிராமங்கள் வசிக்கும் மலைவாழ் மக்கள் பயன்பெறுவார்கள் என வேலுச்சாமி எம்.பி. தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது இந்திய தொலைதொடர்பு துறை டெபுட்டி டைரக்டர் ஜென்ரல் சத்தியபிரிய தர்ஷிணி, கொடைக்கானல் நகர் மன்ற தலைவர் செல்லத்துரை, துணை தலைவர் மாயக்கண்ணன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், மேல்மலை ஒன்றிய செயலாளர் ராஜதுரை, கொடைக்கானல் முன்னாள் நகர்மன்ற தலைவர் முகமது இப்ராஹிம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் நடந்த ஆய்வு கூட்டத்தில் கொடைக்கானல் டி.எப்.ஓ யோகேஷ் குமார் மீனா, கொடைக்கானல் ஆர்.டி.ஓ. ராஜா, கொடைக்கானல் நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் ராஜன், ஏ.சி.எப். சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு மேல்மலை பகுதியிலுள்ள விவசாயிகள் பிரச்சினைகள், நகர் பகுதியில் உள்ள மேம்பாட்டு பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.