search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாலாஜாபாத் ஒன்றியத்தில் எம்.பி. நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு
    X

    வாலாஜாபாத் ஒன்றியத்தில் எம்.பி. நிதியில் கட்டப்பட்ட கட்டிடங்கள் திறப்பு

    • ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார்.
    • சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    வாலாஜாபாத்:

    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் பரந்தூர் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் பஸ் பயணிகள் நிழற்கூடமும், சிங்காடிவாக்கம் ஊராட்சியில் ரூ.10 லட்சம் செலவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் விழா மேடையும், அத்திவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சிறுவேடல் கிராமத்தில் ரூ.19 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடமும் கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்.பி. க.செல்வம் நிதி ஒதுக்கீடு செய்து அனுமதி அளித்தார். அதன்படி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களில் திறப்பு விழா நேற்று நடைபெற்றது

    க.செல்வம் எம்.பி. தலைமையில் நடைபெற்ற விழாவில் உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ. க.சுந்தர், காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ. சி.வி.எம்.பி. எழிலரசன் கலந்து கொண்டு, கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

    விழாவில் வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் படுநெல்லி பி.எம். பாபு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ராஜலட்சுமி குஜராஜ், ஒன்றிய கவுன்சிலர் லோகுதாஸ், ஊராட்சி மன்ற தலைவர்கள் அத்திவாக்கம் குமார், சிங்காடி வாக்கம் சுரேஷ், ஒன்றிய அவைத்தலைவர் பழனி, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கட்ராமன், கவிதா டில்லி பாபு, ஒன்றிய பொருளாளர் வேளியூர் சங்கர், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், தண்டலம் பார்த்திபன், திருஞானசம்பந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×