என் மலர்
உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து நெரிசலால் சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதை படத்தில் காணலாம்.
போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி
- சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
- நடைபாதை சாலையை ஆக்கிரமிப்பு செய்து கடை களை வைத்துள்ளனர்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் நகரத்தில் சாலையோ ரங்களில் உள்ள நடைபா தைகளை கடைக்காரர்கள் ஆக்கிரமித்து தங்கள் கடை பொருட்களை வைத்துள்ள தாலும், சாலை யோரங்க ளில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்துவதாலும் பொது மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் அவதி பட்டு வருகின்றனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோ ரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக காவேரிப்பட்ட ணம் நகரம் திகழ்ந்து வருகிறது. இந்நகரை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்நகரில் ஏராள மான அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என ஏராளமானவை உள்ளன. அவற்றிற்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
காவேரிப்பட்டணம் நகரத்தில் முக்கிய சாலை யாக சேலம் மெயின் ரோடு உள்ளது. இந்த மெயின் ரோட்டில் பூக்கடை, பழக்கடை, பூஜைக்கடை, புத்தகக்கடை, மளிகைக் கடை, பாத்திரக்கடை, செருப்புக்கடை, துணிக்க டை, எலக்ட்ரிக்கல் கடை உள்ளிட்ட ஏராளமான கடைகளை நடத்திவரும் கடைக்காரர்கள் அவர்க ளின் கடைக்கு வெளியே சுமார் 5 அடி தூரத்திற்கு நடைபாதை சாலையை ஆக்கிரமிப்பு செய்து தங்களின் கடைக்கு வெளி யே இருபுறமும் தங்கள் கடை பொருட்களை வைத்துள்ளனர்.
இதனால் பொதுமக்கள் நடைபாதையில் நடந்து செல்ல முடியாமலும், காலை மற்றும் மாலை நேரங்களில் இரு சக்கர வாகனங்களில் செல்ல முடியாமலும்,மேலும் அக்கடைகளுக்கு வருவோர் தங்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்துவதால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் காவேரிப்பட்டணம் நகரின் முக்கிய பகுதியாக சக்தி விநாயகர் கோவில் நான்கு ரோடு சந்திப்பு உள்ளது. இச்சந்திப்பிலிருந்து தான் சேலம் நெடுஞ்சாலை மற்றும் பேருந்து நிலையம் ஆகியவற்றிற்கு பொது மக்கள் செல்ல வேண்டும். இச்சந்திப்பில் கடை வைத்திருப்பவர்கள் நடை பாதை மற்றும் சாலையை ஆக்கிரமித்து கடை வைத்துள்ளனர். இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சாலையில் நிறுத்தி விட்டு செல்வதால் அங்கு மிகுந்த போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.
இது குறித்து பொதுமக்கள் கூறும்போது:-
பணகல் தெரு மற்றும் அகரம் சாலை ஒரு வழி பாதையாக இருக்கிறது. ஆனால் நெடுஞ்சாலை துறையால் முறையான அறிவிப்பு பலகை இல்லாத தால் இந்த சாலைகளில் வாகனங்கள் வருவதும் போதுமாக உள்ள கார ணத்தினால் போக்குவரத்து கடும் நெரிசல் ஏற்படுகிறது. இது குறித்து பலமுறை புகார் தெரிவித்தும், நெடுஞ்சாலைத் துறையினர் கண்டு கொள்வதில்லை. எனவே வரும் பண்டிகை காலங்களுக்குள் ஒருவழி பாதை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும்.
மேலும் இது குறித்து போலீசார் மற்றும் பேரூ ராட்சி நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுத்து போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு ஏற்படுத்தி பொதுமக்களின் சிரமத்தினை போக்கிட வேண்டுமென பொதுமக்கள் தெரிவித்தனர்.






