search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செஞ்சி- மேல்மலையனூர் பகுதியில் திடீர் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி
    X

    செஞ்சி பகுதியில் ஏற்பட்ட பனி மூட்டத்தை படத்தில் காணலாம்.

    செஞ்சி- மேல்மலையனூர் பகுதியில் திடீர் பனி மூட்டத்தால் வாகன ஓட்டிகள் அவதி

    • அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர்.
    • தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதியில் மார்கழி மாதத்தில் பனி அதிகமாக பெய்யும். கடந்த ஒரு வாரமாக பனி குறைந்துவிட்ட நிலையில் இன்று காலை திடீரென பனிமூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் சாலை தெரியாமல் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். அவர்கள் முகப்பு விளக்குகளை போட்டபடி மெதுவாக சென்றனர். இந்த பனிமூட்டம் காலை 8 மணி வரை நீடித்தது. ஏற்கனவே பனிமூட்டம் ஊருக்கு வெளியில் மட்டும் தெரியும். ஆனால் தற்போது ஊரில் உள்ளேயும் பனிமூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த பனிமூட்டம் எங்கோ தீ விபத்து ஏற்பட்டு புகை வருவது போல் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேல்மலையனூரில் இன்று காலையில் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கு ஒளிரவிட்டபடி சென்றனர்.நேற்று முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டதுடன் சாரல் மழை பெய்தது. ஆனால் இன்று பனிமூட்டம் காணப்படுகிறது

    Next Story
    ×