என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெரும்பாறை அருகே சாலை தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம்
    X

    மலைச்சாலையில் உள்ள ஆபத்தான வளைவு.

    பெரும்பாறை அருகே சாலை தடுப்புச்சுவர் சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சம்

    • பெரும்பாறை-சித்தரேவு மலைச்சாலையில் சில இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது.
    • சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பெரும்பாறை:

    பெரும்பாறை-சித்தரேவு மலைச்சாலையில் சில இடங்களில் தடுப்புச்சுவர் இடிந்து சேதமடைந்துள்ளது. மேலும் சாலையில் வடிகால் வசதி இல்லாததால் மழை நீர் சாலையில் ஓடுகின்றது.

    தற்போது இப்பகுதியில் மழை பெய்து வருவதால் சிறு, சிறு கற்கள் சாலையில் கிடக்கின்றன. இதனால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் தவறி விழுந்து காயமடைகின்றனர். மேலும் பெரும்பாறை அருகே உள்ள கீழ் இஞ்சோடை என்ற இடத்தில் சாலையின் ஒரு பகுதி தாழ்வாக உள்ளது. இதனால் கனரக வானம் சென்றுவர மிகவும் சிரமப் படுகின்றனர்.

    பஸ்கள் அந்த இடத்தில் வரும்போது கவிழ்வது ேபால் சாய்ந்து செல்வதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கீழ் இஞ்சோடை சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×