என் மலர்
உள்ளூர் செய்திகள்

2 குழந்தைகளுடன் தாய் மாயம்
- கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.
- மனமுடைந்து காணப்பட்ட மகாலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், தொப்பூர் அடுத்துள்ள சேசம்பட்டியான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் மஞ்சுநாதா. இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களுக்கு சர்வேஷ், பிரித்திகா ஆகிய 2 குழந்தைகள் உள்ளன.
இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் இருவருக்கும் தகராறு நடந்தது. இதில் மனமுடைந்து காணப்பட்ட மகாலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் வீட்டில் இருந்து மாயமானார்.
இது குறித்து தொப்பூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






