search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த குடிநீர் தொட்டிகள் சி.சி.டி.வி  மூலம் கண்காணிப்பு
    X

    பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு சேலம் தமிழ்ச்சங்கம் சார்பில் அவரது சிலைக்கு தலைவர் சீனிதுரைசாமி, செயலாளர் வரதஜெயக்குமார், பொருளாளர் எஸ்.டி.சங்கரன் ஆகியோர் மாலை அணிவித்தனர்.

    குடிநீர் விநியோகத்தை முறைபடுத்த குடிநீர் தொட்டிகள் சி.சி.டி.வி மூலம் கண்காணிப்பு

    • சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
    • 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகர பகுதியில் சீரான முறையில் குடிநீர்விநியோகம் செய்வது குறித்தான ஆய்வுக்கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநகர பகுதியில் தற்போது எத்தனை நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என்பது குறித்தும் மாநகர பகுதியில் உள்ள 57 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் 1,17,000 குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீர் வழங்கப்படும் விவரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

    அனைத்து பகுதிகளுக்கும் தங்குதடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஒவ்வொரு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கும் உள்ள குடிநீர் இணைப்புகள் எத்தனை என்பதை துல்லியமாக கணக்கெடுப்பு செய்து அதன் அடிப்படையில் குடிநீர் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

    குடிநீர் விநியோகத்தினை முறைப்படுத்திட அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் உள்ள பகுதிகளில் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது. மாநகர பகுதியில் பணிபுரியும் பிட்டர்கள் பகுதி வாரியாக குடிநீர் விநியோகம் செய்யும் நாள் ,நேரம் ,ஆகியவற்றை அட்டவணைப்படுத்தி பகுதிகளில் வசிக்கும் மக்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப குடிநீர் விநியோகத்தை சீர்படுத்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    மாநகர பகுதியில் அனுமதியற்ற முறையில் குடிநீர் இணைப்புகள் பெறபட்டுள்ளதா என்பதையும் வணிக நிறுவனங்கள் அனுமதி அளித்திற்கு மேற்பட்டு முறைகேடாக குடிநீரை பயன்படுத்துகிறார்களா என்பதையும் கண்காணிக்கவும், அனுமதி இல்லாமல் உள்ள குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிப்பு செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கூட்டத்தில் மாநகர பொறியாளர் ரவி, உதவி ஆணையாளர்கள் ரமேஷ்பாபு , சாந்தி , தியாகராஜன், கதிரேசன். .சுப்பையா மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×