என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெங்கல் அருகே வீட்டு பூட்டை உடைத்து பணம்-வெள்ளி பொருட்கள் கொள்ளை
- விஜயா உடல்நிலை பாதிக்கப்பட்டதால் தனது மகள் வீட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், வெங்கல் அருகே புலியூர் கண்டிகை கிராமத்தை சேர்ந்தவர் விஜயா (வயது 69). இவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதால் கடந்த மாதம் 11-ந் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை முகப்பேரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மருத்துவ சிகிச்சைக்காக சென்றிருந்தார்.
இந்த நிலையில், நேற்று வீட்டிற்கு வந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரொக்க பணம் ரூ.10 ஆயிரம், வெள்ளி பொருட்கள் விலை உயர்ந்த சேலைகள் உள்ளிட்டவைகளை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து வெங்கல் போலீஸ் நிலையத்தில் நேற்று புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story